
சென்னை,
கோட்டை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அவசர ஆலோசனை செய்து வருகிறது.
அவர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி மற்றும் முக்கிய அமைச்சர்கள் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இரட்டையை இலையை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில்,
இரு அணிகளும் இணைய பேசுவதற்கு தான் தயார் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ள நேரத்தில் இந்த அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel