வறண்ட, வறட்சி நிறைந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் அலைய வேண்டியுள்ளது. இவர்களின் கஷ்டத்தைப் போக்கும்விதமாக,அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், நம்மைச் சுற்றியுள்ள காற்றில் உள்ள ஈரப்பதத்தை பிரித்தெடுத்து தண்ணீரை பெற முடியும் என நிரூபித்துள்ளனர். வியாழக்கிழமையன்று இதன் செயல்முறை விளக்கத்தை ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர். ஈவ்லின் வாங் (Evelyn Wang) கூறினார்.


மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இல் உள்ள விஞ்ஞானிகள் ஒரு பெட்டியை உருவாக்கியுள்ளனர், அவை குறைந்த ஈரப்பதமான காற்றுகளை தண்ணீராக மாற்றி, ஒவ்வொரு லிட்டர் 12 மணிநேரமும் தயாரிக்கின்றன என்று சயன்ஸ் இதழில் எழுதியுள்ளனர்.

ஹுயூன்யோ (Hyunho), சங்க்வூ( Sungwoo), சமீர் (Sameer), சங்கர் மற்றும் அரி ஆகியோர் இந்த சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.

ஒரு கிலோ உலோகக் கலவையைக் (801 [Zr6O4(OH)4(fumarate)6]  ) கொண்டு ஒரு நாளில் 2.8 லிட்டர் தண்ணீர் தயாரிக்க முடியும்.

பேராசிரியர் ஈவ்லின் வாங்
பேராசிரியர் சங்கர் நாரயணன், ஜார்ஜியா இன்ஸ்டியூட் ஒஃப் டெக்னாலஜி

இதுகுறித்து அறிந்துக் கொள்ள இந்த ஆய்வுக்கட்டுரையின் இணையாசிரியர்களில் ஒருவரும், எம்.ஐ.டி.யில் மெக்கானிக்கல் பொறியியல் துறையில் பணிபுரியும் ஈவ்லின் வாங் ( Evelyn Wang) கிடம் இதுகுறித்து சில கேள்விகள் எழுப்பினோம். அதற்கு அவர் அளித்த விளக்கம்:
வறண்டப் பகுதிகளில் குறைந்த ஈரப்பதமுள்ள காற்று உள்ளதை நாம் அறிவோம். அந்தக் காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் பெட்டியை நாங்கள் தயாரித்துள்ளோம்” என்று கூறினார்.
மட்டுப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு கொண்ட தொலைதூர பகுதிகளுக்கு உண்மையில் இந்த தொழில்நுட்பம் பேருதவியாய் இருக்கும்.
தற்போது, முன்மாதிரி கட்டத்தில் இருக்கும் இந்த நுண்ணிய மணலைப் போன்றப் பொருளினால் ஆன அமைப்பில், அதன் சிறிய துளைகளில் காற்றைப் பறிக்கப் பயன்படுத்துகிறது. சூரியன் அல்லது வேறொரு மூலத்தால் சூடுபடுத்தப்படும்போது, சிக்கியிருக்கும் காற்றுக்குள் உள்ள நீர் மூலக்கூறுகள் வெளியிடப்பட்டு, நீர் வெளியேற்றப்படுவதால், இந்தத் தயாரிப்பின் மூலம் கிட்டத்தட்ட காற்றிலிருந்து நீர் வெளியேற்றப்படுகின்றது என்றார்.
எம்ஐடியில் உள்ள ஒருக் கட்டிடத்தில் மொட்டைமாடியில் இந்த அமைப்பு வைத்துச் சோதிக்கப்பட்டது. காற்று வறண்டு 20 முதல் 30 சதவிகித ஈரப்பதத்தில் இருந்தபோது கூட, இந்தத் தயாரிப்பினால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு கிளாஸ் தண்ணீரை உருவாக்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.
ஏற்கெனவே வாட்ட்ட்-ஜென் மற்றும் ஈகோல் ப்ளு (EcoloBlue) போன்ற நிறுவனங்கள் காற்றிலிருந்து நீர்வழங்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்கின்றன. இந்தப் புதிய முன்மாதிரி பற்றிச் சிறப்பு என்னவென்றால், அது குறைந்த ஈரப்பதம் சூழலில் எந்த ஆற்றலையும் உபயோகிக்காமல் நீரை உற்பத்தி செய்ய முடியும்” என்றார் வாங் பெருமையுடன். உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் குறைந்த ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது
எந்தவிதமான குளிர்பதன சுழற்சிகள் போன்ற சிக்கலான அமைப்பு எதுவுமே தேவைப்படாத அமைப்பு எங்கள் தயாரிப்பு முன்மாதிரி என்றும் அவர் குறிப்பிட்டார்.
வறட்சியில் வாடும் நிலப்பகுதிகள் பெரும்பாலும் வறண்ட காற்றையே அனுபவிக்கின்றன. எங்களின் புதிய தயாரிப்பு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குத் தண்ணீர் எளிதில் கிடைக்க உதவும் என்றும் வாங் கூறினார்.
இப்போது நாம் உண்மையில் உலர், வறண்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு இந்தச் சாதனத்தை வழங்க முடியும். அவர்களும் இந்தச் சாதனத்தை மிக எளிமையாகப் பயன்படுத்தலாம்.
இந்த ஆய்வின் இணை ஆசிரியரான ஓமர் யாகி “இந்தச் சாதனம் மற்றும் தொழில்நுட்பம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தண்ணீர் கிடைப்பதற்கான கதவைத் திறக்கிறது” என்று குறிப்பிட்டார்.
கலிபோர்னியா பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியரான ஒமர் யாகி, இந்தச் சாதனம், எதிர்காலத்தில் எல்லா மக்களும் தங்களின் தனித்தனியான வீடுகள் மற்றும் விவசாயப் பண்ணைகள் ஆகியவற்றிற்கான நீர்ப்பாசனம் உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்துவார்கள்” என்றார் நம்பிக்கையுடன்.
இந்தச் சாதனத்தின் பயன்பாடு குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கும் அப்பால், வேளான்மை (விவசாயம்) போன்ற பெரிய நிலங்களை நீர்பாய்ச்சவும் இந்தச் சாதனத்தின் தொழில்நுட்பம் பயன்படுத்த வழி உள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில், இந்தத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி பெரிய அளவிலான சாதனங்களைத் தயாரித்து, சோதனை வெற்றியடைந்தவுடன் ஒப்பீட்டளவில் மலிவான விலையில், ஏழை மக்களால் பயன்படுத்தக்கூடிய அளவில் சந்தைப்படுத்தப் படும்.

வறண்டக் காற்றில் இருந்து தண்ணீர்: எம்.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் சாதனை