சென்னை:

இன்று சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகர பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சிக்கிக்கொண்டன. இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் பதறியடித்தபடி கீழே இறங்கினர். காரில் சென்றவரை பொதுமக்கள் மீட்டெடுத்தனர். நல்வாய்ப்பாக உயிர்ப்பலியோ காயமோ இல்லை.

 

ஆனால் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் இது. அதுவும் பேருந்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்த நேரத்தில் அந்தப்பகுதியில் சென்றவர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய  நிகழ்வு.

விரைந்து வந்த தீயணைப்புப்படையினரும் பேருந்து மற்றும் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வேடிக்கை பார்த்து நிற்கவேண்டாம் என மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

 

ஆனால் வேடிக்கை பார்க்க பெருமளவில் மக்கள் திரண்டனர். அது மட்டுமல்ல பள்ளம் ஏற்பட்ட இடத்துக்கு அருகில் மீண்டும் பள்ளம் உருவாகும் ஆபத்து இருப்பதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

 

பள்ளத்தில் விழுந்த கார் மற்றும் பேருந்துக்கு அருகில் நின்றபடி ஆளாளுக்கு செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர். செல்பி எடுக்க முண்டியடித்ததால் அந்த பகுதியில் மேலும் நெரிசல் ஏற்பட்டது.

பிறகு காவல்துறையினர் கடுமையாக அறிவுறுத்தவே கூட்டம் ஓரளவு கட்டுக்கள் வந்தது.

செல்பி வெறியால், ஏற்கெனவே  உலகம் முழுதும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மரண சம்பவங்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களிலும் வெளியாகி உள்ளன. ஆனாலும ்மக்களிடையே செல்பி வெறி குறைவதாக இல்லை என்பது சோகமே.