சென்னை:
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா நடந்ததாக கூறப்படும் புகார் குறித்து நாளை மறுநாள் (10ந் தேதி) விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ராஜேஷ்லக்கானி டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவது குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் வருமானவரித்துறை ஒப்படைத்துள்ளது. இது தொடர்பான புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ராஜேஷ் லக்கானிக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து ராஜேஷ் லக்கானி விளக்கம் அளிப்பதற்காக டெல்லி செல்லவுள்ளார். இதனால் ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel