சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே சசிகலாவின் கணவரான எம். நடராஜனுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவரது சொந்தக்கருத்துக்களே” என்று அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிடிவி தினகரன் தெரிவித்ததாவது:
“எம். நடராஜன் கூறும் கருத்துக்கள் அவரது சொந்தக் கருத்துக்களே. அதவை கட்சியின் கருத்து அல்ல. அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. எத்தனையோ பேர் கட்சியில் இல்லாமல், ஆதரவாளராக இருப்பார்கள். நடராஜனும் அப்படித்தான்.
அவர் அதிமுக ஆதரவாளராக இருக்கலாம். அனுதாபியாக இருக்கலாம். ஆனால் அவர் கட்சிக்காரரும் அல்ல.. அவரது கருத்து கட்சியின் கருத்தும் அல்ல.
உறவினர்கள் என்பதற்காகவே ஒருவர் கட்சிக்காரர் ஆகிவிட மாட்டார். என் உறவினர்கள் எத்தனையோ பேர் திமுகவில் இருக்கிறார்கள்..!” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.