மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவன் (பா. ஏகலைவன்) அவர்களது முகநூல் பதிவு:


இரவு எட்டு மணிக்கு  (ஆர்.கே. நகர்) தொகுதி பக்கம் சென்றிருந்தேன்.

முக்கிய சிலரை சந்தித்து பேசியதிலிருந்து…

”காலையில் ஐந்து மணிக்கு தொடங்கியிருக்கிறது. தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, ஏன் கம்யூனிஸ்ட்டுகளின் வீடுகளைக்கூட விட்டுவைக்கவில்லையாம் ‘தொப்பி’ பார்ட்டி.

ஒவ்வொரு வீடாகப்போய் கமுக்கமாக உட்கார்ந்து ஓட்டுக்கு நாலாயிரம்னு கணக்குபண்ணி கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு ’உடன் பிறப்பு’ வீட்டில் மட்டும் 13 ஓட்டுகளாம். மொத்தம் 52 ஆயிரம்..அந்த குடும்ப தலைவரு சொன்னாராம், ‘நான் மட்டும் உங்களுக்கு ஓட்டு போடமாட்டம்ணே. தப்பா நினைக்காதீங்க. வீட்ல இருக்கிற மத்தவங்க எல்லாம் போட்டுடுவாங்கன்னாராம்..

எவ்வளவு யோக்கியமான உடன்பிறப்பு பாருங்க..

மாலை 5 மணிக்கெல்லாம் OVER AII FINISHED…
எந்த வீட்டையும் விட்டு வைக்கவில்லை” என்ற உறுதியான செய்தி ‘சுற்றித் திரிந்தது’-

….மொத்தமாய் ‘தொப்பி’ போட்டிருக்கிறார்கள் போல.

நம்ப உடன்பிறப்பு வகையறா ஓட்டுக்கு 1000 ரூபாய் என நீட்டியிருக்காம். அதுவும் கட்சிகாரர்கள், ஓட்டு போடுபவர்களை மட்டும் கணக்கிட்டு கொடுத்துவிட்டு கம்பி நீட்டியிருக்கிறார்கள்.

ஆமாம்..இவிங்களுக்கெல்லாம்  இம்புட்டு பணம் மொத்தமா எப்படி வந்திருக்கும்.???