டெல்லி:

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்….

ஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து துணை தேர்தல் அலுவலர்களையும் தமிழக அரசு மாற்ற வேண்டும். அதேபோல் அனைத்து கூடுதல் காவல்துறை ஆணையர்கள், மாநகராட்சி துணை பொறியாளர்களையும் மாற்ற வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் கூடுதலாக 5 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்து பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்.

அனைத்து தெருக்களிலும் 24 மணி நேரமும் பறக்கும் படைகள் ரோந்து பணியில் ஈடுபடும். பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, காட்சிகளை நேரடியாக அதிகாரிகள் கண்காணிப்பார்கள். தேர்தல் பிரசாரத்திற்கு அரசு மற்றும் அமைச்சர்களின் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்தல் ஆணையம் அந்த அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.