டெல்லி:

மத்திய அரசு பணிகளுக்கு நேரடி ஆட்கள் தேர்வு கடந்த 2015ம் ஆண்டில் 89 சதவீதம் குறை க்கப்பட்டுள்ளது என்று லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஒரு லட்சத்து 51  ஆயிரத்து 841 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

மத்திய பணியாளர், மக்கள் குறைதீர் மற்றும் ஒய்வூதிய துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று  லோக்சபாவில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

2014ம் ஆண்டில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 261 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 2015ம் ஆண்டில் 15 ஆயிரத்து  877 பேர் மட்டுமே தேர்வு செய்யப்ப்டடனர். இது 2013ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 89 சதவீதம் குறைவா கும். அதேபோல், மத்திய அரசில் இட ஒதுக்கீடு உள்ள பணிகளுக்கான ஆட்கள் தேர்வு 2013ம் ஆண்டோடு  ஒப்பிடுகையில் 2015ம் ஆண்டில் 90 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

2013ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த 92 ஆயிரத்து 928  பேர் 74 அமைச்சகங்களில் நேரடியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது 2014ம் ஆண்டில் 69 அமை ச்சகங்களில் 72 ஆயிரத்து 77 பேரும், 2015ம்ஆண்டில் 50 அமைச்சகங்களில் 8 ஆயிரத்து 436 பேர் மட்டுமே  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது 2013ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 90 சதவீதம் குறைவாகும்.

2014&15ம் ஆண்டில் 79 அமைச்சகங்களில் 18 ஆயிரத்து 822 பேர் அதாவது 8.56 சதவீதம் பேர் சிறுபான்மை  சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அரசு பணி மற்றும் பொது துறை நிறுவனங்களில் நியமனம் செய்யப்பட் டுள்ளனர். 2015&16ம் ஆண்டில் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 44 அமைச்சகங்களில் 2 ஆயிரத்து  851 பேர் அதாவது 7.5 சதவீதம் பேர் பணியமர்த்தப்பட்டதாக அந்த பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.

‘‘அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளில் காலியாகும் பணியிடங்கள் பணியாளர் தேர்வு விதிமுறை மூலம்  நிரப்பப்பட வேண்டும். இது ஒரு தொடர் பணியாகும். யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி மூலம் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்ப முன் கூட்டியே அனைத்து துறைகளும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.  அதேபோல் துறைகளில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்ப  உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று அமைச்சர் ஜிதேந்திரநாத் தெரிவித்தார்.