வாஷிங்டன்,

குழந்தைகளுக்கு அல்லா என்று பெயரிட அமெரிக்காவில் தடை  விதிக்கப்பட்டுள்ளது. ஜ்யார்ஜியா மாகாணத்தில் பிலால் வாக் என்பவருக்கும் எலிசபெத் ஹேண்டி என்பவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தை பிறந்து 22 மாதம் ஆகியும் பெயர் சூட்டமூடியாமல் பெற்றோர்கள் அவதிபட்டு வருகின்றனர்.

குழந்தை பிறந்ததுமே சால்க்யா கிரேஸ்வுல் லொரைய்னா  அல்லா என்று  பெயரிட்டனர்.  ஆனால்  ஜ்யார்ஜியா மாகாணச் சட்டபடி குழந்தையின் பெயரின் இறுதியில் அல்லா என்று வரக்கூடாது அப்பா அல்லது அம்மாவின் பெயர்தான் வரவேண்டும் எனக்கூறி குழந்தையின் பெயரை பதிவு செய்ய மறுத்துள்ளன.

அல்லா என்பது மதத்தின் பெயர் அல்ல. நீண்டநாள்களுக்குப் பிறகு பிறந்த குழந்தை என்பதால் இறைவனின் பெயரில் வைத்துள்ளோம். இதில் என்ன தவறு என பெற்றோர்கள் கேட்பதுடன் அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

ஜ்யார்ஜ்யாவில் இருக்கும் மனித உரிமை சங்கத்தின்மூலம்  நீதிமன்றத்தில்  கடந்த 23 ந்தேதி வழக்குத் தொடுத்துள்ளனர்.

மனித உரிமையை ஜ்யார்ஜியா மாகாண அரசு மீறுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் மனித உரிமைச்சங்கம் மக்கள் எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்று அரசு சொல்லக்கூடாது என  தெரிவித்துள்ளது.

இந்தப்பிரச்னையினால் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ், சமூக பாதுகாப்பு எண் போன்ற அவசியமானவைகளை பெறமுடியாமல் பெற்றோர் திண்டாடி வருகின்றனர்.