திருவனந்தபுரம்,

பாலியல் புகார் காரணமாக பதவி விலகிய சுசீந்திரன் மீது கூறப்பட்ட புகார் குறித்து நீதி விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரள போக்குவரத்து அமைச்சராக இருந்த ஏ.கே.சசீந்திரன், பெண் ஒருவரிடம் ஆபாசமாக பேசியது தொடர்பான ஆடியோ மலையாள மீடியாக்களிலும், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக சசீந்திரன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், இந்த ஆடியோ குறித்து, கேரள முதல்வர் பிரனாயி விஜயனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது,

“சசீந்திரன் மீதான குற்றச்சாட்டு குறித்து நீதி விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. விசா ரணைக்கு தலைமையேற்கும் நீதிபதி குறித்து, நடைபெறும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.

இதுகுறித்து,  புகார் கூறப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சசிந்தீரன் கூறும்போது, “குற்றத்தை ஒப்புக்கொள்ளும் விதமாக நான் பதவி விலகவில்லை. தார்மீக அடிப்படையிலேயே  பதவி விலகினேன் என்றார்.  நான்எ ந்தப் பெண்ணிடமும் தவறாக நடந்து கொண்டது இல்லை. என்மீது கூறப்பட்ட புகார் குறித்து எந்தவொரு விசாரணையை சந்திக்கவும் நான் தயாராகவே இருக்கிறேன். முறையாக விசாரணை நடந்தால் உண்மை நிச்சயம் வெளியாகும்’’

இவ்வாறு அவர் கூறினார்.