லக்னோ:
நாட்டில் பிரம்மச்சாரி முதல்வர்கள் எண்ணிக்கை ஆதித்யாநத் மூலம் மேலும் உயர்ந்துள்ளது.
உ.பி. முதல்வராக 44 வயதாகும் யோகி ஆதித்யாநத் இன்று பதவி ஏற்றுள்ளார். இவர் பிரம்மச்சாரி. நேற்று பதவி ஏற்ற உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் (வயது 56), ஹரியானா முதல்வர் எம்.எல். கத்தார் (வயத 62), அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனாவல் (வயத 54), ஓடிசா முதல்வர் நவீன் பட் நாயக் (வயத 74) ஆகியோர் பிரம்மச்சாரி முதல்வர்கள். இவர்கள் அனைவரும் தற்போது பதவியில் இருப்பவர்கள்.
நாட்டின் மிக முக்கிய மாநிலமான உ.பி.யில் பதவி ஏற்றிருக்கும் முதல் ஆண் பிரம்மச்சாரி என்ற பெருமையை ஆதித்யாநத் பெற்றுள்ளார். இவர்களை தொடர்ந்து நவீன் பட்நாயக், 62 வயதாகும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றவர்கள் கு டும்ப வில்லங்கம் இல்லாததால் தொடர்ந்து முதல்வர்களாக உள்ளனர்.
முக்கிய அரசியல் கட்சி தலைவர்களான ராகுல்காந்தி (வயது 46), பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் மாயாவதி (வயது 61), உமாபாரதி (வயது 57) ஆகியோர் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் ஆகியோர் மனைவியை இழந்தவர்கள்.
ஆர்எஸ் எஸ் தலைவர் மோகன் பகாத் சிறு வயதிலேயே திருமணத்தை மறுத்தவர். இதேபோல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த 2015ம் ஆண்டு 83வது வயதில் மறைந்த நாட்டின் 11வது ஜனாதிபதியான அப்துல்கலாம் திருமணம் ஆகாதவர்.
இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தனது 68வது வயதில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் திருமணம் ஆகாதவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.