பாட்னா:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்னைக்கு சட்டப்பூர்வ முறையில் தீர்வு காண வேணடும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
லோக் ஜன சக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் அயோத்தி ராமர் கோவில் கட்டும் விவகாரம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை.
மாறாக வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, குறித்த தான் அவர் பேசினார். ஏழைகளின் முன்னேற்றத்திற்காக பணிய £ற்றுவேன் என்று உ.பி. மக்களுக்கு மோடி உத்தரவாதம் அளித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட் டுவதற்கு நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும்’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த வழித்தடத்திலேயே ஆதித்யாநத் அரசு செயல்படும். ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் மோடி சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தி சார்பில் ஒரு வேட்பாளர் கூட உ.பி.யில் நிறுத்தவில்லை. வாக்குகள் சிதறுவதை தடுக்கவே பாஜவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
வாக்குகள் சிதறினால் எதிர்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். 2019ம் ஆண்டு பொது தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வழிநடத்தி செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. பிரதமருக்கு எதிரான முடிவை அவர் எடுக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார் பஸ்வான்.
‘‘பீகாரில் தற்போது தேர்தல் நடந்தால் மோடிக்கு தான் அதிக வெற்றி கிடைக்கும் நிலை இருக்கிறது. பிரதமர் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். மணிப்பூரில் லோக்ஜன சக்தி கட்சியின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. ஒரு இடத்தில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளி க்கிறது’’ என்று ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
இவரது மகனும், எம்பி.யுமான சிராக் பஸ்வான் கூறுகையில், ‘‘பீகாரில் நிதிஷ்குமாருக்கும், லல்லு பிரசாத் யாதவு க்கும் இடையே சமுகமான உறவு இல்லை. அதனால் அங்கு இடைத்தேர்தல் வரும் என்ற செய்திகளை மறுப்பதற்கில்லை. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.