டெல்லி:

ஸ்டிரைக்கில் ஈடுபடும் வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணிகளை தவிர்க்கும் வக்கீல்களை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று பார் கவுன்சில் ஆப் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி வக்கீல்கள் சட்டம் வடிவமைக்கும் பணியை சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபவதை தடுக்கவும், நீதிமன்ற பணிகளில் ஈடுபடாமல் தவிர்த்து வருவோர் தொடர்ந்து வக்கீல் தொழிலில் ஈடுபட தடை செய்ய வேண்டும் என்று சட்ட ஆணையத்துக்கு பார் கவுன்சில் ஆப் இந்தியா பரிந்துரைத்துள்ளது.

‘‘ஒரு வக்கீல் இது போன்ற செயலில் ஈடுபட்டால் அது ஒழுங்கீன நடவடிக்கையாக கருதப்பட வேண்டும். அவ்வாறு ஈடுபடும் வ க்கீல்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கோ அல்லது நிரந்தரமாகவோக நீக்கம் செய்ய வேண்டும்’’ என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வக்கீல் தொடர்ந்து நீதிமன்றத்தில் வக்கீல் பணியை மேற்கொள்வது தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் வக்கீல்கள் சட்டம் வகுக்க சட்ட ஆணையத்தை அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்த க்கது.

மேலும், நாட்டில் உள்ள 21 லட்சம் வக்கீல்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். அதனால் போலி வக்கீல்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பார் கவுன்சில் ஆலோசித்து வருகிறது.