
மும்பை:
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பரின் மும்பை இசை நிகழ்ச்சி தொடக்க விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என ஹிந்தி நடிகை சோனாக்சி சின்ஹா தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டை சேர்ந்த பாடகரும், பாடலாசிரியருமான ஜஸ்டின் பெய்பர் உலகப்புகழ் பெற்றவர். கிராமி விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர். 22 வயதே ஆன இந்தப்பாடகருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். Purpose என்ற ஆல்பம் உள்பட ஏராளமான ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் இந்தியா துபாய், இஸ்ரேல், அய்க்கிய அரபு உள்ளிட்ட உலக நாடுகளில் இசைநிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார். இதன் ஒருபகுதியாக வரும் மேமாதம் 10 ந்தேதி மும்பையில் உள்ள படீல் ஸ்டேடியத்தில் இசை விருந்து படைக்கவிருக்கிறார்.
இந்த அருமையான விழாவின் தொடக்க விழா நிகழ்ச்சியி்ல் பிரபல ஹிந்தி நடிகை சோனாக்சி சின்ஹா பங்கேற்று ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்த உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், தனக்கு மிகவும் பிடித்த ஜஸ்டின் பெய்பரின் இசை நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் பங்கேற்பது தனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது என நடிகை சோனாக்சி சின்ஹா கூறினார்.
[youtube-feed feed=1]