உலக அளவிலான பெண்கள் செஸ் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை அவமானப் வீராங்கனைக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று வருந்துகிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற உலக சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஹரிகா வெண்கலப்பதக்கம் பெற்றார்.
இந்த போட்டியில் உலகெங்கிலும் இருந்து 64 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பிப்ரவரி 11 முதல் மார்ச் 5 வரை இந்த போட்டி நடைபெற்றது.
அரையிறுதிப்போட்டியின்போது சீனா வீராங்கனையிடம் மோதினார் ஹரிகா.
அப்போது டை பிரேக்கரில் ஒரு பாய்ன்டில் தோல்வியுற்றார். இதனால் இறுதி வாய்ப்பை இழந்து வெண்கல பதக்கம் பெற்றார்.
உலக அளவில் நடந்த இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வெண்கல பதக்கம் பெற்றது மிகுந்த பெருமைக்குரியது.
ஆனால் இந்த பெருமையைத் தேடித்தந்த ஹரிகா, இந்தியா திரும்பியபோது, விமான நிலையத்தில் வரவேற்கவோ, அவரது வெற்றி குறித்து கொண்டாடவோ யாருமே இல்லை.
ஆம்.. இந்திய விளையாட்டுத்துறை அவரை மறந்துவிட்டது.
அங்கே இரண்டே இரண்டு பேரின் கைதட்டல்கள் மட்டுமே ஒலித்தன.. அவை – ஹரிகாவின் பெற்றோர் கைதட்டல்கள்தான்!
அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளது.
“எத்தனையோ விளையாட்டுக்களில் நமது நாட்டவர்கள் உச்சம்பெற்று உள்ளனர். அவர்களை கொண்டாட நம் நாட்டினர் மறந்துவிடுகிறார்கள். ஒன்றுமில்லாத கிரிக்கெட்டை தலையில் வைத்து கொண்டாடுவார்கள்!” என்று வருத்தததுடன் தெரிவித்திருக்கிறது.
சுடும் உண்மை!