இம்பால்,

ரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள இரோம் ஷர்மிளா.  தேர்தலில் வெறும் 90 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்ததால், இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர் சமூக சேவகி இரோம் ஷர்மிளா

மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய அவர், மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலில் மாநில முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து தெளபால் தொகுதியில் போட்டியிட்டார்.

நேற்று  தேர்தல் முடிவுகள்  அறிவிக்கப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரோம் ஷர்மிளாவுக்கு வெறும் 90 வாக்குகுள் மட்டுமே கிடைத்தன. அவர் படுதோல்வி அடைந்தார்.

இதன்ல் அதிர்ச்சியடைந்த இரோம் ஷர்மிளா  அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது:

தற்போது உள்ள அரசியல் நடைமுறைகள் மனவிரக்தியைத் தருகின்றன. இதன் காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அரசியல் ரீதியாக தோல்வியடைந்தாலும், சமூக சேவகராக எனது பணிகள் தொடரும் என்றும், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யும் வரை எனது போராட்டம் முடிவடையாது என்றார்.

மேலும்,  தற்போது எனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவில் இருந்து மீண்டு வரவும், மன நிம்மதிக்காக வும், சில நாள்களுக்கு தென்னிந்தியாவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.

தற்போதைய அரசியல் நடைமுறைகளைக் கண்டு தாம் விரக்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.