சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சி வருடந்தோறும் விவசாயிகளுக்கான பட்ஜெட் வெளியிடுவது வழக்கம்.

அதுபோல் இந்த வருடமும் விவசாயிகளுக்கான பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. அதில், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை இலவசமாக வழங்குதல் மற்றும் பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், 2017-18ம் ஆண்டுகான வேளாண்மை நிழல் நிதி அறிக்கையை வெளியிட்டு ராமதாஸ் கூறியதாவது,

கடந்த 3 மாதத்தில் மட்டும் தமிழகத்தில்  300 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாடு முழு வதும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் என்றார்.

மேலும்,  மாநில, மத்திய அரசுகளும் வேளாண்மைகக்காக தனி  வரவு-செலவு அறிக்கையை வெளியிட வேண்டும் என்றார்.

பா.ம.க. 10-ஆவது ஆண்டாக வேளாண்மை நிழல் நிதிஅறிக்கையை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது என்றும், 56 தலைப்புகளில் 226 முக்கிய யோசனைகளை நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளோம் என்றும்,

இதில் விவசாயிகள் தற்கொலைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த காரணங்களை ஆய்வு செய்து,  அதன் காரணமாகவே விவசாயிகள் அனைவருக்கும் வேளாண்மை இடு பொருள்களை இலவசமாக அளிக்கும் சிறப்புத் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது என்றார்.

மேலும், கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகையை உடனே வழங்கவும் கூட்டுறவு வங்கிகளில் கடனைத் தள்ளுபடி செய்தது போல் தேசிய வங்கிகளிலும் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளோம்.

வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், கரும்பு ஏக்கருக்கு ரூ.90 ஆயிரம், நெல்லுக்கு ரூ.25 ஆயிரம், மற்ற பயிர்களுக்கு சந்தை விலைக்கேற்ப நஷ்டஈடு தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வேளாண்  நிழல் நிதி அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:

விவசாயிகளின் தற்கொலைகளை தடுப்பற்காக கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்ட சிறப்புத் திட்ம் செயல்படுத்தப்படும்.

வேளாண்மைக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களையும் இலவசமாக வழங்குதல்.

வேளாண் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை வழங்குதல்.

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாகப் பெற்றுத் தருதல்.

கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன்சுமையிலிருந்தும் உழவர்களை விடுவித்தல்.

இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்படும்போது, அதன் பாதிப்பு விவசாயிகளைத் தாக்காத வகையில், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி இழப்பீடு வழங்குதல். 

 இந்த நடவடிக்கைகள் மூலம் விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க  முடியும் என்பது எங்கள் நம்பிக்கை. இதையும் தாண்டி வேளாண்மை சார்ந்த  பாதிப்புகள் காரணமாக விவசாயிகள் எவரேனும் தற்கொலை செய்துகொண்டால், அது அரசின் தோல்வியாகக் கருதப்பட்டு, அந்த உழவரின் குடும்பத்திற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்கப்படும்.

2016-17ம்  ஆண்டில் தற்கொலை  செய்து கொண்டும்,  அதிர்ச்சியால்  மாரடைப்பு  ஏற்பட்டும்  உயி ரிழந்த 300க்கும் கூடுதலான விவசாயிகளின் பட்டியல் மாவட்ட வாரியாக  தயாரிக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன்பின் அடுத்த மாத இறுதிக்குள் அவர்ளிகளின் குடும்பங்களுக்கு தலாரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீட்டுத் திட்டம்

4. வறட்சியால்  உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்கும் வகையில் நிவாரணத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்விவரம் வருமாறு:

அ. வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

ஆ. கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.90,000 வீதமும், நிலக்கடலைக்கு ரூ.25,000 வீதமும் இழப்பீடு வழங்கப்படும்.

இ. பிற பணப்பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

ஈ. நிலமற்ற ஏழைத் தொழிலாளர்கள், நிலம் இருந்தும் வறட்சி காரணமாக சாகுபடி செய்யாத சிறு, குறு விவசாயிகள் ஆகியோருக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000நிதியுதவி வழங்கப்படும்.

ஊ. வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களின் கூட்டுறவுப் பயிர்க்கடன்கள் எந்த நிபந்தனையும்  இன்றி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

பொதுத்துறை வங்கிக்கடன் தள்ளுபடி

5. பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.22,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். இந்ததொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு  வட்டியுடன் சேர்த்து 5 சம தவணைகளில் தமிழக அரசு வழங்கும்.

6. கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.12,000 கோடி கடன் வழங்கப்படும்.

7. கூட்டுறவு வங்கிகள் வழங்கும் பயிர்க்கடனுக்கு வட்டி விதிக்கப்படாது. அத்துடன் 15% மானியம் வழங்கப்படும். இதனால் ரூ. 1 லட்சம் கடன் பெற்றவர்கள்ரூ.85,000 செலுத்தினால் போதுமானது.

மேலும் விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.