
ஒடிசா:
இன்று ஒடிசா கடற்கரையில் நடைபெற்ற பிரமோஸ் ஏவுகணையின் சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரமோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட புதிய ஏவுகணை சோதனையை இன்று இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதித்தது.
இந்த சோதனை ஒடிசா கடற்கரையில் இருந்து இலக்கை நோக்கிச் செலுத்தப்பட்டது. பிரமோஸ் குறி வைதத அந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பரிசோதனை தொடர்பாக பிரமோஸ் ஏரோஸ்பேஸ் முதன்மை நிர்வாகி கூறுகையில் “உலகின் மிகச்சிறந்த சூப்பர்சானிக் ஏவுகணை என்பதை பிரமோஸ் மீண்டும் நிரூபித்துள்ளது” என்றார்.
Patrikai.com official YouTube Channel