டெல்லி:
12 பூச்சிக் கொல்லி மருந்து வகைகளுக்கு வரும் 2020ம் ஆண்டில் முழு தடை விதிப்பது தொடர்பாக அந்நிறுவனங்களின் இந்திய பங்குதாரர்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. வல்லுனர் குழு அளித்த பரிந்துரையில் பேரில் 13 பூச்சிக் கொல்லி மருந்துகளில் பங்குதாரர்களுக்கு விளக்கம் கேட்டு வேளாண் துறை கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் பர்ஷோத்தன் ரூபலா எழுத்துப்பூர்வமான அறிக்கையை ராஜ்யசபாவில் தாக்கல் செய்து பேசுகையில்,‘‘12 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்த தடை விதிக்கவும், 6 மருந்துகளை வெளியே அனுப்பவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்த பூச்சி கொல்லிகளில் பேனோமைல், கார்பரில், டையாசினன், பெனாரிமோல், பென்தியோன், லினுரான், எம்இஎம்சி, மெத்தில் பார்தியோன், சோடியம் சையனைடு, தியோமெடன், திரிதிமோர்ப், திரிபுலுராலின், ஆலாச்லார், டிச்லோர்வஸ், போரோட், பாஸ்பமிடான், ட்ரையாசோபோஸ், திரிச்சிலோர்பார்ன் ஆகிய ரசாயனங்கள் இதில் பயனபடுத்தப்படுகின்றன.
இதர நாடுகளில் தடை செய்யப்பட்ட போதிலும், இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் 66 பூச்சிக் கொல்லிகள் மீது தொழில்நுட்ப ரீதியான ஆய்வகள் மேற்கொள்ள இந்த குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் பென்சீன், ஹெக்சாகுலோரைடு, நைட்ரோபென், பெனில் மெர்குரி அசிடேட் ஆகியவை கலவைகள் மற்றும் 32 பூச்சிக் கொல்லிகள் தடை செய்யப்பட்டுள்ளது என்று ராஜ்
யசபாவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கேப்டபால், நிகோடின் சல்பேட் ஆகிய இரு பூச்சிக் கொல்லிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள போதும் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. 13 பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 18 பூச்சிக் கொல்லிகள் இந்தியாவில் பதிவு செய்ய மறுப்பு தெரிவிக்கப்ப்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.