நாக்பூர்:
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாத்துக்க மகாராஷ்டிரா பல்லைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

நாக்பூரில் உள்ள விலங்குகள் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம் அறிவியலுக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை இவருக்கு வழங்கியுள்ளது. கவர்னர் வித்யாசாகர் ராவ் இந்த பட்டத்தை வழங்கினார். கால்நடை அறிவியலில் அவரது பங்களிப்பிற்காக இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

‘‘நான் நீண்ட காலமான இதற்காக பணியாற்றி கொணடிருக்கிறேன். சமுதாயத்திற்கும், இந்த நாட்டிற்கும் எவ்வளவு கடினமான பணியாக இருந்தாலும் செய்து கொண்டிருக்கிறேன், வேளாண் உள்ளிட்ட சில தொழில்கள் கால்நடைகளை நம்பி உள்ளது. ஆனால் இந்த துறை புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

தற்போது தான் படிப்படியாக இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வருகிறோம். புதிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு தேவையான வசதிகளை அரசாங்கங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ’’ என்று பகத் தெரிவித்தார்.

இவர் இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழு தலைவர் திரிலோகாவ் மோகபாத்ரா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.