மும்பை: மகாராஷ்திர மாநில திறன் மேம்பாட்டு துறை தொகுத்திருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 2016 ஆம் ஆண்டின் போது மகாராஷ்டிரா அரசினால் பணிக்கு அமர்த்தப்பட்ட 25 சதவீதம் இளைஞர்கள் ஆறு மாதங்களுக்குள் தங்களின் முதல் வேலையை விட்டு விலகினர்.
மகாராஷ்டிராவில் புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கு ஆரம்பச் சம்பளம் ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை கொடுக்கப்பட்டது. இதில் பெரும்பான்மையானோர் சில்லறை வர்த்தகம், விருந்தோம்பல் துறை, உற்பத்தி மற்றும் துரித-உணவுகம் போன்ற துறைகளில் வேலை செய்தனர். பணமதிப்பிழக்க நடவடிக்கையால், பொருளாதாரம் பாதிக்கப் பட்டது. எனவே, முதலாளிகளின் ஆட்குறைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கை காரணமாக வேலைகள் இழப்பு நடந்தன. ஆனால், இது தொடர்பான புள்ளிவிவரங்களைப் பெற அரசினால் பெறமுடியவில்லை.
“பெரும்பாலான இளைஞர்கள் அவர்களின் குறைந்த ஊதியம் என்பது கௌரவக் குறைச்சல் என எண்ணி வேலையை விட்டு சென்றனர். அதில் பெரும்பாலான இளைஞர்கள் மற்றொரு வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் வேலையை விட்டுவிட்டு இப்போது வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். மிகவும் குறைவாக இருந்தது உணர்ந்தேன் பதவியில்,” என்று மகாராஷ்டிராவின் திறன் மேம்பாட்டுச் செயலாளர், தீபக் கபூர் கூறினார். விலையுயர்ந்த விடுதி, தினசரி போக்குவரத்து மற்றும் உணவு போன்ற மற்ற காரணங்களும் இளைஞர்கள் வேலையை ராஜினாமா செய்தவதற்கு காரணமாக இருந்தன என அதிகாரிகள் கூறினர்.
குறைந்த பட்ச ஊதியம் குறித்து கேட்டபோது, “எந்தவொரு நிறுவனமோ தொழிற்சாலையோ குறைந்தபட்ச கூலியை விடக் குறைவாகக் கொடுக்க்க் கூடாது. அப்படி அவர்கள் கொடுத்தால், அவர்கள் தங்களது உரிமத்தை இழக்க நேரிடும். ஆகையால், மெக்டொனால்டு மாதம் ஒன்றுக்கு ரூ.7,000 கொடுப்பது நாள் ஒன்றுக்கு ரூ.240 க்கு சமமாக இருக்கும். இது விதிகளுக்கு உட்பட்டுள்ளது” என்று கபூர் கூறினார்.
கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு, பயிற்சி பெறாத தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி ரூ. 8,460, பாதி திறமையான தொழிலாளர்களின் கூலி ரூ. 8,880 மற்றும் திறமையான தொழிலாளர்களின் கூலி ரூ. 9,300 ஆகும்.
வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடம் கைத்தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ITIS) இருந்து ஒரு டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு இருந்தது அல்லது அவர்கள் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தனர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திறன் மேம்பாட்டுத் துறை, 2016 இல் மகாராஷ்டிராவின் உட்பகுதிகளில் பெரிய தனியார் நிறுவனங்கள் மற்றும் துரித உணவுக் கடைகளை வேலை கண்காட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
ஒருவேளை எந்த அரசு அதிகாரிகளோ அல்லது முதலாளிகளோ கிராமப்புற இளைஞர்களின் ஊதிய எதிர்ப்பார்ப்புகளை ஊகிக்க முடியவில்லை. “ஆறு மாதங்களுக்கு முன் அமராவதி வேலை கண்காட்சியின் போது கஃபே காஃபி டே நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட 250 பேரில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு ஊழியர்கள் குறைந்த சம்பளத்தை காரணம் காட்டி வேலையிலிருந்து விலகினர். இதே போன்று மெக்டொனால்டிலும் நடந்துள்ளது,” என்று கபூர் கூறினார்.
2016 ஆம் ஆண்டில் 2.5 லட்சம் இளைஞர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டதாக, திறமையான இளைஞர்களின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புக்குக் காரணமான திறன் மேம்பாட்டுத் துறை கூறுகிறது.
பெரிய அளவிலான பதவி விலகல்கள் மற்றும் முதலாளிகளிடமிருந்து எச்சரிக்கை குறிப்புகள்பற்றிய கவலையினால், திறன் மேம்பாட்டுத் துறை தொழில் நிறுவனங்களில் அனைத்து மாணவர்களுக்கும் இப்போது ஒரு சிறப்பு “மென்திறன் (softskills)” பாடத்தைச் சேர்த்துள்ளது.
“மென் திறன்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான காரணம் வேலையில் புதிதாகச் சேர்பவர்களுக்கு தொடக்கத்தில் கொடுக்கப்படும் சம்பளம் பற்றி அறிவுறுத்துவதே ஆகும். பெரும்பாலான இளைஞர்கள் பெரிய நிறுவனங்களிடமிருந்து அதிக சம்பளத்தை எதிர்பார்க்க்கிறார்கள். அவர்கள் செயல்திறன் அடிப்படையில் ஒரு சில ஆண்டுகளில் சம்பள உயர்வு கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,” என்று கபூர் கூறினார்.
பெரும்பாலான இளைஞர்கள், மும்பை மற்றும் புனே போன்ற பெரிய நகரங்களில் பணியமர்த்தப் படுவதால், குறைந்த சம்பளத்தில் அவர்களால் தனது உண்வு, வீட்டு வாடகை உள்ளிட்ட செலவினங்களுக்குப் பணம் போதாமல் திண்டாடுகின்றனர். ஆகவே, இனிமேல், அனைவருக்கும் ஒரே மாவட்டத்திற்குள் வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்மூலம், மூன்று நான்கு வாலிபர்கள் விடுதி வாடகையைப் பகிர்ந்து கொண்டும், வார இறுதியில் தங்கள் வீடுகளுக்கு பயணித்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும் என நம்புகின்றோம்” என்று கபூர் கூறினார்.
மாநில மற்றும் மத்திய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை இணைத்து மறுபெயரிட்டு “ஸ்கில் (திறன்) இந்தியா” என மோடி பெயரிட்டது குறிப்பிடத் தக்கது.
காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்களை பெயரை மாற்றி, கவர்ச்சிகரமான பெயர் சூட்டி கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வீண்விளம்பரப் படுத்துவதை விட குறைந்தப் பட்சக் கூலியை உயர்த்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மிக் கட்சி, குறைந்தபட்சக் கூலியை உயர்த்தியுள்ளது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.