சென்னை,
அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலை தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலாவை எதிர்த்து தனியாக வெளியேறினார். அவருக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோரி வருகின்றனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டிலும் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கோரி வருகிறார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். தற்போதுழ அவரது உண்ணாவிரத போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
அதைத்தொடர்ந்து ,சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் அணியினர் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
சிங்கப்பூர், மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட 35 இடங்களில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.