கல்கத்தா,

ள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இது நாட்டு மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் இந்த செயல், ஏழை குழந்தைகளின் உரிமையை பறிக்கும் செயல் என்று  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மதிய உணவு திட்டத்திற்கு ஆதார் எண கட்டாயம் என்றும், மதிய உணவு திட்டத்தில் சேரும் மாணவர்கள் கட்டாயம் ஆதார் வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமையல்காரர்கள், உதவியாளர்கள் ஆகியோரும் தங்களது ஆதாரை ஜூன் 30க்குள் பதிவு செய்ய வேண்டும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, ஏழைகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசின் அறிவிப்பு உள்ளதாக குறிப்பிட்டார்.

100 நாள் வேலை திட்டமே ஒழுங்காக செயல்படுத்தப்படாத நிலையில், மதிய உணவு திட்டத்துடன் ஆதாரை இணைப்பது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ள மம்தா பானர்ஜி, ஏழை குழந்தைகளின் உரிமையை பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.