பங்களாதேஷில் பெண்கள் திருமணம் செய்யும் வயது 15 வயதாக குறைக்க அந்தநாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பங்களாதேஷில் தற்போது, திருமணம் செய்துகொள்ள ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது.
தற்போது இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.
ஒருசில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் 15 வயது முழுமை அடைந்த சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வங்கதேச அரசு ஓப்புக்கொண்டுள்ளது.
வங்க தேச அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், பெண்கள் கல்வி அறிவு பெற்றாதால் தான் ஒரு நாடு முன்னேறும் என்ற நிலை இருக்க 15 வயதில் திருமணம், குடும்ப வாழ்க்கை என்பது பெண்களின் முன்னேற்றத்திற்கு விதிக்கப்படும் தடையாக அமையும் என்றும் அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக இந்த சட்டம் அமல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.