ஐதராபாத்:

திருமணம் ஆன பெண்கள் கல்லூரியில் படிக்க முடியாது என தெலங்கானா அரசு முடிவெடுத்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் சமூகநலத்துறையின் சார்பாக பெண்கள் இலவசமாக தங்கிப்படிக்கும் வகையில் 23 கல்லூரிகள் செயல்பட்டு
வருகின்றன. இந்தக்கல்லூரிகளில் திருமணம் ஆன பெண்களும், திருமணம் நடைபெறாத பெண்களும் தங்கி படிக்கும் விதமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இந்தாண்டு முதல் அம்மாநில அரசு திருமணம் ஆகாத
பெண்கள் மட்டுமே, தங்கிபடிக்கும் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமூகநலத்துறை அதிகாரி வெங்கட் ராஜூ
என்பவர் கூறியதாவது: ” கல்லூரியில் படிக்கும் மனைவியை பார்க்க கணவன் வரும்போது திருமணம் ஆகாத மாணவிகளின் சிந்தனை திசை திருப்பபடுகிறது. இது சம்பந்தமான புகார்களும் நிறைய வந்துள்ளன.

அதனால் தங்கிபடிக்கும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவிகள் திருமணம் செய்யாதவர்களாக இருக்கவேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் திருமணம் ஆன பெண்கள் படிக்கமுடியாத சூழல்
ஏற்பட்டுள்ளது.