டில்லி:

டந்த 27 ஆண்டுகளுக்கு முன்னால் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட உயர்கல்வி சேர்க்கையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆலோசனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற அமர்வு மத்திய மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.

“நாடு விடுதலை அடைந்து 68 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் , “சில முன்னுரிமைகள்” மாறாமலே இருப்பது வருத்தமளிக்கிறது .

நாட்டின் நலன் கருதி உயர் கல்வி நிலையங்களில் உள்ள எல்லாவிதமான இட ஒதுக்கீடுகளையும்  நீக்க  தேவையான நடவடிக்கைகளை  எடுக்க மத்திய அரசு உறுதியாக செயல்படவேண்டும்” என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் நீதியரசர்கள் தீபக் மிஸ்ரா மற்றும்  பி.சி.பந்த் தெரிவித்துள்ளதாவது:

“இந்த இடஒதுக்கீட்டு முன்னுரிமை பல ஆண்டுகளாக முடிவற்று நீடித்துக்கொண்டேயுள்ளது.

1988- ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு உயர் சிறப்பு மருத்துவக் கல்வி சேர்க்கையில் இடஒதுக்கீட்டுமுறை முழுமையாக ரத்து செய்யத் தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

மத்திய மாநில அரசுகள் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

உச்சநீதிமன்றம் 27 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்த தீர்ப்பை தாங்கள் எதிரொலிப்பதாகவும் தேசிய நலனை முன்னிருத்தும் இந்த நிலைப்பாட்டை அதிகாரத்தில் உள்ளோர் பாரபட்சமற்ற முறையில் அணுகி மதிப்பீடு செய்யவேண்டும்” என்று தெரிவித்தார்கள்..