சென்னை,
அதிமுக முன்னாள் எம்எல்ஏ நடிகர் ராதாரவி இன்ற திமுகவில் இணைந்தார். திமுக தலைமையமான அண்ணா அறிவாலயம் சென்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் மீண்டும் ஐக்கியமானார் ராதாரவி.
பழம்பெரும் நடிகரான எம்.ஆர்-ராதாரவின் மகனும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நடிகர் ராதாரவி இன்று அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
இவர் ஏற்கனவே, திமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தார. பின்னர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக வில் இணைந்தார். தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
இன்று திமுகவில் இணைந்தது குறித்து ராதாரவி கூறியதாவது,
திமுகவில் இணைந்தது, தன்னுடைய குடும்பத்தில் இணைந்தது போல் உணர்கிறேன் என்றார். மேலும், அதிமுக வில் நான் நம்பி இருந்தவர் மறைந்துவிட்டார் என்று உருக்கமாக கூறினார். இந்த தேர்தலில் மட்டுமல்ல எந்த தேர்தலில் இருக்கும் இயக்கம் திமுக. முழுமையாக இருக்கும் இயக்கம் திமுக.
ஏன் சொல்கிறேன் என்றால் சிதறி கிடக்கும் இடத்தில் இருப்பவர்கள் இங்கு வந்து சேர வேண்டும்.
நான் நம்பி இருந்தவர் இறந்து விட்டார். அவரைப்பற்றி பிறகு சொல்கிறேன்.
நாளை என் தளபதி பிறந்த நாள். இன்று என் தாயார் மறைந்த நாள் . நாளை தங்க சாலை பொதுக்கூட்டத்தில் விரிவாக பேசுகிறேன்.
தற்போது என் மனதில் உள்ளதை பிறகு கூறுகிறேன். தமிழ்நாட்டுக்கு தகுதி உடைய தலைவன் யார் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலினைவிட்டால் யார் இருக்கிறார்கள் . ஸ்டாலினால்தான் தமிழ்நாட்டை காக்க முடியும். இப்போது அதிமுக என்ற ஒன்றே இல்லை.
ஸ்டாலின் ஒருவர் தான் ஒப்பற்ற தலைவர் அவரால் தான் தமிழகத்தை காக்க முடியும்.
இவ்வாறு ராதாரவி பேசினார்.
கடந்த 2ம் தேதி, பழநியில் இன்று நடைபெற்ற, நடிகர் சந்திரசேகரின் மகள் திருமணத்தில், தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த திருமணத்தில் ராதாரவியும் கலந்துகொண்டு “திராவிட குடும்பத்தில் நான் இணையும் வேளை வந்துவிட்டது” என்று பேசினார்.
மேலும், “முன்பே.கலைஞர் (கருணாநிதிஃ என்னிடம் ராதாரவி எப்பவும் இங்கதாண்டா (தி.மு.க.) இருக்கணும் என்று சொன்னார்” என்றும் ராதாரவி தெரிவித்தார். தொடர்ந்து மணமக்களை வாழ்த்திப் பேசிய அவர், “ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்றும் தமிழகத்தை வழிநடத்த தகுதியான ஒரே தலைவர் அவர்தான்” என்றும் புகழ்ந்து பேசினார்.
ராதாரவியின் பேச்சை, மேடையில் இருந்த மு.க.ஸ்டாலின் ரசித்து கேட்டார். அப்போதே, “ராதாரவி தி.மு.க.வில் இணையப்போகிறார்” என்ற பேச்சு எழுந்தது. இது குறித்து அன்றே நமது பத்திரிகை டாட் காம் இதழில் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.