சென்னை,

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்றைய வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்த  பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அதிக நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்க வேண்டும், வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, வாராக் கடனை முழுவதுமாக வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும்  வேலைநிறுத்தம் நடைபெறு கிறது.

 

இன்று நடைபெறும் போராட்டத்தில் நாடு முழுவதும்  10 லட்சம் பேர் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

இன்றைய போராட்டத்தில் தமிழகம் முழுவதும  வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 65 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது.