புதுக்கோட்டை:

மிழ்நாட்டில் நெடுவாசலில்  உருவாகி வரும் ஹெட்ரோகார்பன் திட்டத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்தியஅரசின் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்தால், இயற்கை வளங்கள் அழிக்கப்படும் என்றும் தண்ணீர் கிடைக்காமல் போய் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், திட்டத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நெடுவாசல் நிறைவேற்றப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய பெட்ரோலிய துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது,

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மிகக் குறுகிய பகுதி மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் நிலத்தடி நீருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் . தமிழக அரசுக்கு 40 கோடி ரூபாய் ராயல்டி கிடைக்கும்.

மேலும்,  இத்திட்டத்துக்கு ஏற்கனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது” என்று கூறப்பட்டு உள்ளது.

ஆனாலும் இந்த விளக்கத்தை ஏற்க மக்கள் மறுத்துவருகிறார்கள்.