
களுத்துறை:
இலங்கை களுத்துறையில், காவல் வாகனத்தின் மீது அடையாளரம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு அதிகாரி மற்றும் எட்டு கைதிகள் பலியானார்கள்.
இலங்கையின் மேல் மாகாணத்தின் களுத்துறை பகுதியில் உள்ள சிறைச்சாலையில் இருந்து காவல்துறை வாகனத்தில் இன்று காலை கைதிகள் சிலர் ஏற்றப்பட்டனர். அப்போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட எட்டு கைதிகள் பலியானார்கள்.
“ரகசிய குழு ஒன்றின் முக்கிய உறுப்பினர் சமன் என்பவரும் இத்தாக்குதலில் பலியானார்” என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் இலங்கையின் மேற்கு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel