வாஷிங்டன்:

அமெரிக்காவில் பொது இடங்களில் ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பேச வேண்டாம் என்று அங்குள்ள இந்தியர்களின் சமூக வளை தளங்களில் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன் கன்சாஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு பாரில் இனவெறியன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் ஐதராபாத் பொறியாளர் சீனிவாஸ் குச்சிபோத்லா என்பவர் மரணமடைந்தார். அவரது நண்பர் அலோக் ரெட்டி மதசானி காயமடைந்தார்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. குறிப்பாக தெலுங்கு பேசும் இந்தியர்கள் அமெரிக்காவில் அதிகம் வசிக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதனால் பொது இடங்களில் ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்தியர்கள் பேச வேண்டாம் என்று சமூக வளைதளங்களில் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது.

மேலும், அங்கு எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பது குறித்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெலங்கானா அமெரிக்கர் தெலுங்கு சங்க பொதுச் செயலாளர் விக்ரம் ஜங்கா தெரிவித்துள்ளார்.

*பொது இடங்களில் யாருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

* யாரேனும் உங்களை குறிவைத்து கோபத்தை தூண்டு வகையில் பேசினார், அதை எதிர்கொள்ளாமல் தயவு செய்து அங்கிருந்து வெளியேறி விடுங்கள்.

* நமது தாய்மொழியில் பேசுவதை நாம் விரும்புவோம். ஆனால் அதை சிலர் தவறாக நினைக்க வைத்துவிடும். அதவால் பொது இடங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே பேசவும்.

* தனிமையான இடங்கள் தான் குறி வைக்கப்படும். அதனால் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.

* அவசர நேரத்தில் 911க்கு போன் செய்யவும். அந்த சூழ்நிலையில் இருந்து அதிகாரிகள் வந்து காப்பாற்றுவார்கள்.

* சுற்றுபுறம் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். சந்தேகப்படும் படியாக எதையும் பார்த்தால் உடனடியாக தகவல் தெரிவி க்கவும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

‘‘அமெரிக்காவில் சில பகுதிகளில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் உள்ளது. அங்கு அமெரிக்கர்கள் மிகவும் நட்புறவுடன் பழகுகிறார்கள். இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் அங்கு நடந்ததில்லை. இது போல் ஒன்று அல்லது இரண்டு சம்பவங்கள் தான் நட ந்துள்ளது’’ என்று பே பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் சரத் தேவுலப்பள்ளி தெரிவித்தார்.