கிரிஸ்,
கிரிஸ் நாட்டின் தலைநகரான ஏதென்சில் வருடாந்திர ஷோம்பி திருவிழா நடைபெற்றது.
உலகம் முழுவதும் பிரச்சித்தி பெற்ற ‘வேர்ல்டு வார் இசட்’ என்ற திரைப்படம் ஷோம்பியை பற்றி மிரட்டலாக வெளிவந்து ஓடியது அனைவரும் அறிந்ததே.
அதுபோல தமிழில் முதல் ஷோம்பி படமாக ஜெயம் ரவி நடித்த ‘மிருதன்’ படம் வெளியாகி பட்டிதொட்டிகளிலும் ஷோம்பி என்ற கேரக்டரை மக்கள் மனதில் நிலைநிறுத்தியது.
பார்ப்பதற்கு குரூர தோற்றமுடன் அருவெறுப்பாக தோன்றும் ஷோம்பி கதாபாத்திரத்தின் வருடாந்திர விழா ஆண்டுதோறும் ஏதென்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டவர்கள் வயது வித்தியாசமின்றி ரத்த காட்டேரிகள், கெட்ட ஆவிகள் போன்று வேட மணிந்து சாலைகளில் நடந்து பொதுமக்களையும், சுற்றுலாவாசிகளையும் பயமுறுத்தினர்.
1980ல் வெளியான ‘ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்’ என்ற ஆங்கில திரைப்படத்தின் குரூர காதபாத்திரங்களை நினைவு படுத்தும் வகையில் ஷோம்பி வாக் என்ற பெயரில் இந்த விழா ஆண்டுதோறும் கொண்டாப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.