சென்னை,

திமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசலை தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் களமிறங்கி னார்.   தன்னை மிரட்டிதான் சசிகலா  தரப்பினர் ராஜினாமா செய்ய வைத்தனர் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு, சசிகலாவுக்கு எதிராக களமிறங்கினார்.

அதைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக பதவி ஏற்க தகுந்தவாறு அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வானார்.  கவர்னரை சந்தித்து, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரினார்.

தனக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களை கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் 12 நாட்களாக அடைத்து வைத்தார்.

ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு ஜெயில் தண்டனை உறுதியானதால் அவரது ஆதரவு பெற்ற எடப்பாடி தமிழக முதல்வரானார்.  அவரை கவர்னர் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கோரினார்.

இதற்கிடையில் சசிகலா தரப்பினரால் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்ட தான், மாறுவேடத்தில் தப்பி வந்ததாக மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். தொடர்ந்து ஒபிஎஸ்.அணிக்கு தாவினார்.

கூவத்தூரில் இருந்து தப்பிய சரவணன் எம்எல்ஏ, தான் அடைத்து வைக்கப்பட்டது குறித்து கூவத்தூர் காவல்நிலையத்திலும், சென்னை டிஜிபி அலுவலகத்திலும் புகார் கொடுத்தார்.

அந்த புகார் குறித்து இன்று விசாரணை நடைபெற்றது.  கூவத்தூர் காவல்நிலைய போலீஸார். கல்பாக்கம் காவல்நிலைய போலீஸார், மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்டு தலைமையில் கல்பாக்கம் அணுமின்நிலைய விருந்தினர் மாளிகையில் மதுரை எம்எல்ஏ சரவணனிடம் ரகசிய விசாரணை நடத்தினர்.