கோவை:
“ஈசா ஆசிரமக கட்டிடங்கள் கட்டிய பிறகு, அனுமதி இல்லை என்று சொல்லி இடிக்கச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை” என்று தே.மு.தி.க. மகளிர் அணி தலைவர் பிரேமலதா தெரிவித்தார்.
ஜக்கி வாசுதேவின் ஈசா மைய விழாவில் கலந்துகொள்ள வந்த பிரேமலதா, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “ஈசா ஆசிரம நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது பலர் புகார் கூறுகிறார்கள். அவர் மீது தவறில்லை. தற்போது பலர், ஈசா மையத்தில் திறக்கப்பட இருக்கும் பெரிய சிவன் சிலை குறித்து விமர்சிக்கிறார்கள். காட்டுப்பகுதியை அழித்தி அந்த சிலை மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
இத்தனை பெரிய சிலையை செய்யும்போதுதான் எல்லாரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதன் திறப்பு விழாவுக்கு பிரதம மந்திரி வரக்கூடாது என்கிறார்கள்.
ல லட்சம் சதுர அடி அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் இது குறித்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்றும் புகார் சொல்கிறார்கள்.
அப்படியானால் இவறஅறை கட்ட முதலில் எப்படி அனுமதிக்கிறார்கள்?
கட்டிய பிறகு நிறுத்த வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று பிரேமலதா தெரிவித்தார்.