சென்னை:
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது முதல் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவர் முதல்வராக பதவியேற்ற பின்னரும் நிதித்துறையை அவரே கவனித்து வந்தார்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றபோதும் நிதித்துறையை தன் வசம் வைத்திருந்தார். இந்நிலையில் நிதித்துறையை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் பரிந்துரையை ஏற்ற கவர்னர் வித்யாசாகர் ராவ்,
இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். நிதி, திட்டம், ஊரக மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆகிய துறைகள் அமைச்சர் ஜெய்குமார்க்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel