டெல்லி:
இந்திய பெருங்கடலில் சீனா திடீரென போர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அண்மை காலமாக சீனா ஆயுத பலத்தை அதிகரித்து வருவதாக ஊடகங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. அத்துடன், அந்நாட்டின் ராணுவத்துறையும் அதிரடி மாற்றம் பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் சீனா கடுமையாக ஈடுபட்டுள்ளது.
இந்தவகையில், தனது நாட்டு போர்க்கப்பல்களை பயிற்சிக்காக இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கடந்த காலங்களில் அனுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று சீன கடற்படையினர் இந்திய பெருங்கடல் பகுதியில் திடீர் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன் அறிவிப்பின்றி சீனா ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால் தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தச் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.