சசிகலா அப்படின்னாலே குழப்பமாத்தான் இருக்கு. அவரு ஜெயலலிதாவை ஆட்டிப்படைச்சாரா.. இல்லே, ஜெயலலிதா சொல்றபடி நடந்து சொத்து சேர்த்தாரா.. விவாதம் போயிட்டிருக்கு.
அடுத்ததா, சசிகலா பொதுச்செயலாலர் ஆனதை கட்சி விதிப்படி ஏற்கமுடியாதுன்னு ஒரு விவாதம். இது பத்தி தேர்தல் கமிசனும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கு.
இந்த நிலையில, சசிகலாவோட கைதி என் என்னங்கிறதும் குழப்பமாவே இருக்கே..
ஆரம்பத்துல சசிகலாவோட கைதி எண் 10711 அப்படின்னு செய்தி வந்துச்சு. அப்புறம் 9934 தான் சரின்னு சொன்னாங்க.
இப்போ தேர்தல் கமிசன் சசிகலாவுக்கு அனுப்பிய கடிதத்துல சசிகலா கைது எண் 3295 அப்படின்னு குறிப்பிட்டிருக்கு.
உண்மையிலேயே அவரு கைது எண் இதுதானோ?
இருக்கிற பிரச்சினையில இதுக்கு வேற மண்டை குழம்பனுமானு கேக்குறீங்களா… அதுவும் சரிதான்!