ராஜீவ் சந்திரசேகர்

டில்லி:

யங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை பயங்கரவாத நாடாக அறிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என்று கேட்டு, மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த மாநிலங்களை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர். சுயேட்சை உறுப்பினரான இவர், கடந்த பிப்ரவரி 3ம் தேதி தனிபர் மசோதா ஒன்றை கொண்டுவந்தார். இது வரும் மார்ச் மாதம் 9-ஆம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிரது.
இந்த மசோதா குறித்து தெரிவித்த ராஜீவ் சந்திரசேகர்,

“பயங்கரவாதத்தை ஒழிக்க முயலாத பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடையும், அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் மீது போக்குவரத்துத் தடையும் விதிக்க வேண்டும். அதோடு அந்நாடுகளை பயங்கரவாத நாடுகளாக அறிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தயங்குவது ஏன்” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

ஆனால், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்தால் அது ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தத்தின் படி உள்ள ராஜீய உறவுகளை பாதிக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது. ஆகவே, அதுகுறித்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக  உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மேலும் தெரிவிக்கையில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. ஆகவே, பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிப்பது சரியல்ல  என்று தெரிவிக்கின்றன

ராஜீவ் சந்திரசேகரின்  மசோதாவை பாராளுமன்ற அவைக் குழுவினர் பரிந்துரைத்தால் அது சட்டமாக இயற்றப்படும். பிறகு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒரு வேளை அதிகளவிலான உறுப்பினர்கள் ஆதரித்தால் அந்த மசோதா சட்டமாக உருவெடுக்கும்.

அப்படியொரு சூழல் வந்தால், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத நாடாக அறிவிக்கப்படும். தொடர்ந்து வேறு பல நாடுகளும் இது போன்ற நடவடிக்கை எடுக்க முன்மாதிரியாக இருக்கும்.