டில்லி:

ஏர்செல்-மேக்ஸிஸ் முறைகேட்டில் முதன்மை குற்றவாளி, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான்” என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சாமி  அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.

சிதம்பரம் – கார்த்தி

முக்கிய அரசியல்வாதி ஒருவரின் ஊழல்குறித்த ஆவணங்களை இன்று வெளியிடப்போவதாக சுப்ரமணியன் சாமி நேற்று அறிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  டில்லியில் இன்று செய்தியாளர்களை  சுப்ரமணியசாமி சந்தித்தார். அப்போது அவர், “இந்திய நிறுவனமான ஏர்செல்லின் 100 சதவிதம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனமான மேக்ஸிஸ்க்கு விற்க   அப்போதைய மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம்அனுமதி அளித்தது சட்டவிரோத நடவடிக்கயாகும்.

சுப்பிரமணியன் சுவாமி

இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு ஈடாக மேக்ஸிஸ் நிறுவனம் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு பல்வேறு நிறுவனங்கள் வழியாக லஞ்சம் கொடுத்தது.  கார்த்திசிதம்பரம் சட்டவிரோதமாக  வெளிநாட்டு வங்கிகளில் 21 ரகசிய கணக்குகள் வைத்திருக்கிறார்” என்ற சுப்பிரமணியன் சுவாமி, அதற்காக ஆதாரங்களையும்   வெளியிட்டார்.

இங்கிலாந்திலுள்ள மெட்ரோ வங்கி மற்றும் ஹெச் எஸ் பி சி , சிங்கப்பூரில் உள்ள ஸ்டேண்டர்ட் சார்டட் மற்றும் ஓசிபிசி, ஸ்வட்சர்லாந்தில் இருக்கும் யுபிஎஸ் வங்கி உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் கார்த்தி சிதம்பரம்,  கணக்கு வைத்திருப்பதாக ஆவணங்களுடன் குற்றஞ்சாட்டினார்.

கார்த்தி வங்கி கணக்குகள்

6 லட்சம் கோடி ரூபாயை கார்த்திக் சிதம்பரம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்த சுப்ரமணியன் சாமி, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிதிஅமைச்சகம் மற்றும் வருமானவரித்துறைகளுக்கு சுப்ரமணியன்சாமி கண்டனம் தெரிவித்தார்.

சு.சுவாமி அளித்த ஆவணங்களின் தொகுப்பு: