
செய்தியாளரை கொலை செய்த கஞ்சா வியாபாரிகள் கும்பலில் ஒருவர் இன்று சரணடைந்தார்.
பாலிமர் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரியும் சந்திரன், மதுரை தல்லாகுளம் மகாத்மா காந்தி நகர் அருகே உள்ள முல்லை நகரில் வசித்து வந்தார்.
அதே பகுதியை சார்ந்த சங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட ஏழு நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதுடன், போதையில் ரகளை செய்து குடியிருப்போருக்கு அச்சத்தை எற்படுத்தியும் வந்துள்ளனர்.
இவர்களை, சந்திரன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமான கஞ்சா விற்பனை கும்பல் நேற்று சந்திரனை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றது.
இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொலைக்கும்பலைச் சேர்ந்த மதுரை கருப்பையா என்பவர் இன்று சரணடைந்தார்.
Patrikai.com official YouTube Channel