சென்னை,

மிழகத்தின் தற்போதைய அரசியல் குறித்து சமூக வலைதளங்களிலும் பலவாறாக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும்,  நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் வலைதளத்தில் தமிழக அரசியல் நிலைமை குறித்து கருத்து பதிவிட்டிருந்தார்.

அதில், தான் மும்பைக்கு சென்றுவிட்டு திரும்பி வருவதற்குள், தமிழ்நாடு மாபியா கும்பலின் கைக்கு சென்றுவிட்டதாக பதிவிட்டிருந்தார். அவரது பதிவு பார்த்த பலர் அதற்கு பதில் கமென்ட் போட்டிருந்தனர். சிலர் வரவேற்றும், சிலர் எதிர்ப்பாகவும் கருத்து பதவிட்டிருந்தனர்.

அதில் ஒருவர் மட்டும்,  நீயே கொஞ்ச நாள் முன்னாடி பெரிய மாபியா வசம் தான் இருந்த என்று ட்வீட்டியிருந்தார்.

இதைக்கண்டு ஆத்திரம் அடைந்த குஷ்பு, அவருக்கு டுவிட்டரிலேயே பதில் அளித்தார். அதில்,  அந்த மாபியா நீயா அல்லது உன் மொத்த குடும்பமா?? சொல்லு ப்ரோ என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தற்போதைய  தமிழக சூழல் தனக்கு வருத்தம் அளிப்பதால் இன்று ஸ்மைலி பயன்படுத்த மாட்டேன் என்றும், இன்றைய  காலை மகிழ்ச்சியான காலையாக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கும் ஒருவர் பதில் டுவிட்டிருந்தார். அதில்,  நீ பர்ஸ்ட் ஒரு கட்சியில இரு அப்புறமா பேசு. முதலில் திமுக, இப்போ காங்கிரஸ், அடுத்து பாஜகவா. உன்ன மாதிரி அரசியல் செஞ்சா இப்புடித்தான் என்று கமெண்ட் போட்டார்.

அதற்கு பதிலளித்து குஷ்பு டுவிட்டியதாவது,  நியாயம் பேசுறதுக்கு கட்சி தேவை இல்லை. உன்ன மாதிரி ஆளுங்களால்தான் தமிழகத்திலே பிரச்சனை.. ஜால்ரா போடுறது நிறுத்திட்டு கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்க என பதிவிட்டுள்ளார்.