மதுரை:
மதுரையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு கலந்துகொண்டு பேசினார்.

அப்போது  அவர்,” காவிரிப் பிரச்னையில் ஒன்பது வருடமா நடுவர் மன்றத் தீர்ப்பு நிறைவேற்றப்படவில்லை. இப்படியெல்லாம் இருக்கும் நிலையில், நமது ஆளும் அரசியல் எப்படி உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும், அவர்,  பெரியார் பெயர் சொல்லி திராவிடக்கட்சி என்று கூறிக்கொண்டு, துளி அளவும் பெரியாரின் கருத்துகளோடு ஒத்துப்போகாத இவர்களின் கைகளில்தான்  தமிழர்களின் எதிர்காலம்  உள்ளது என்றும் கூறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று பேரும் குற்றவாளி என, உலகமே பாராட்டும் அளவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு ஒரு பக்கம் இப்படி இருந்தால்,  நான்தான்  முதல்வராக வர வேண்டும் என்கிற  குரலும் நாடு முழுவதும் ஒலிக்கின்றது  என்று வருத்தப்பட்ட நல்லகண்ணு, இப்படிப்பட்ட அரசியல் சூழலில்தான் பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்றவர்கள் தேவை” என்று கூறினார்.