லக்னோ:
இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி. மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்தியாவே எதிர்நோக்கும் உ.பி.யில் சட்டமன்றத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவுற்ற நிலையில், இன்று 3வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை காலை 7 மணிக்கு தொடங்கியது
முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக 67 தொகுதிளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. தற்போது 3வது கட்டமாக 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஆரம்பமாகி உள்ளது.
இன்று நடைபெறும் 3வது கட்ட தேர்தல் 12 மாவட்டங்களை சேர்ந்த 69 தொகுதிகளில் நடைபெறுகிறது. பிரபலமான மெயின்புரி, ஏடாவா போன்ற தொகுதிகள் சமாஜ்வாதியின் கோட்டையாகும். அதுபோலா லக்னோ தொகுதி ராஜ்நாத்சிங்கின் கோட்டை என கூறப்படுபவவை.
சுமார் இரண்டரை கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள். 826 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும், பாரதியஜனதா இரண்டாவது அணியாகவும், பகுஜன் சமாஜ் கட்சி மூன்றாவது அணியாகவும் களத்தில் உள்ளது. அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.