பெங்களூரு:

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை தொடர்ந்து மாணவர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தில் விளைவாக தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிவிட்டார். தமிழகத்தில் தற்போது ஜல்லிக்கட்டு சட்டப்பூர்வ அங்கிகாரம் கிடைத்துள்ளது.

தமிழகத்தை பின்பற்றி கர்நாடகாவில் கம்பாலா என்ற பாரம்பரியமிக்க எருமை பந்தயம் மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களுக்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் இருந்து மாடுகளுக்கு விலக்கு அளிக்கும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு எவ்வித துன்புறத்தலும் இல்லாமல் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அவசர சட்ட மசோதாவை அம்மாநில கால்நடை துறை அமைச்சர் மஞ்சு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

‘‘மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற பாஜ உறுப்பினர்கள் உதவி செய்ய வேண்டும்’’ என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எதிர்கட்சித் தலைவர் ஜெக்தீஸ் ஷெட்டர் இந்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், ‘‘இது போன்ற உணர்வு பூர்வ முடிவுகளை எடுக்கும் முன் நீதித்துறை மாநில அரசுகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.