ஜகர்த்தா:  

ந்தோனேிசிய நாட்டில், திருமணமான பெண் ஒருவர் வேறு ஒரு நபருடன் தவறான உறவு வைத்துக் கொண்டதாக கூறி மசூதி முன்பு அவருக்கு கசையடிகள் வழங்கப்பட்டன.

இந்தோனோசிய நாட்டில் இஸ்லாமிய மக்களை பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இங்கு  இஸ்லாமிய சட்டம்  கடுமையாக பின்பற்றப்படுகிறது. இச் சட்டப்டி திருமணம் ஆன ஒரு பெண், கணவரைத் தவிர வேறு நபருடன் உறவு கொண்டால் அது பெருங் குற்ற்மாக கருதப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், திருமணமான பெண் ஒருவர், வேறு ஒரு நபருடன் உறவு வைத்துக் கொண்டார் என்று குறம்சாட்டப்பட்டார். அவருக்கு 26 கசையடிகள் தண்டனையாக வழங்க உத்தரவிடப்பட்டது.

அந்த பெண்மணி, மசூதி ஒன்றின் முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார். பிறகு   முழங்காலிட்டு உட்கார வைக்கப்பட்டார். பிறகு, காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்மணிக்கு கசையடி தண்டனையை அளித்தார்கள்.

அவருடன் உறவு வைத்திருந்ததாக சொல்லப்பட்டநபருக்கும் கசையடி தண்டனை வழங்கப்பட்டது.

ஏராளமான மக்கள் வேடிக்கை பார்க்க, இந்த தண்டனை நிறைவேற்றப்ட்டது.