பாட்னா:

பணமதிப்பிழப்பு அறிவிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரித்து வந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் மேலாண்மை தோல்வி என்று மன்மோகன் சிங் கருத்தை அவர் ஆமோதித்துள்ளார்.

இது குறித்து நிதீஷ்குமார் கூறுகையில், ‘‘பா.ஜ.க.வை விமர்சனம் செய்வதில் எதிர்கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும். பணமதிப்பிழப்பு அறிவிப்பத்றகு முன் மேற்கொண்டிருக்க வேண்டிய முன்னேற்பாடுகளை செய்யாத காரணத்தால் தான் சிரமங்கள் ஏற்பட்டது’’ என்றார்

மேலும் அவர் கூறுகையில்,‘‘இதன் மூலம் ஏற்பட்ட தோல்வியை மறைத்து கதையை திசை திருப்ப பாஜ முயற்சி செய்கிறது. பாஜ இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடுக்கும் வகையிலான திட்டத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தலைமையேற்று வழிநடத்த வேண்டும். மத்திய அரசின் நிரந்தர மேலாண்மை தோல்வி என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய கருத்து ஏற்றுக் கொள்ள கூடியதாகும்’’ என்று தெரிவித்தார் நிதிஷ்குமார்.

‘‘திட்டமிடாத பணமதிப்பிழப்பு அறிவிப்பை நானும் முதலில் ஆதரித்தேன். கருப்பு பணம், ஊழலுக்கு எதிரானது என்று ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி கூறியதை தொடர்ந்து உடனடியாக நானும் ஆதரித்தேன். ஆனால், இந்த நோக்கத்தில் இருந்து மத்திய அரசு தற்போது திசை திருப்பி சாத்தியமில்லாத ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை புகுத்த துடிக்கிறது’’ என்று அவர் குற்றம்சாட்டின £ர்.

மேலும், நிதிஷ்குமார் பேசுகையில்,‘‘வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொரு தனி நபர் வங்கி கண க்கில் ரூ. 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திசை திருப்ப பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் எவ்வளவு கருப்பு பணம் திரும்ப வந்துள்ளது. பழைய நோட்டுக்கள் எவ்வளவு வந்துள்ளது. பணமதிப்பிழப்பு மூலம் எவ்வளவு வெற்றி கிடைத்துள்ளது என்பதை தெரியபடுத்த வேண்டும்’’ என தெரிவித்தார்.

‘‘சாதனை என்று எதையும் சொல்லிக் கொள்ள முடியாமல் ஒவ்வொரு திட்டமாக மாறி மாறி பாஜ சென்று கொண்டிருக்கிறது. எதிர்கட்சிகள் வெறும்மனே எதிர்க்காமல் ஒரு திட்ட வடிவை தயார் செய்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

முன்னதாக ‘‘எதிர்கட்சிகள் பிரபலங்கள் அடிப்படையில் இல்லாமல் பொது திட்ட நோக்கங்களுடன் எதிர்கட்சிகள் ஒன்று சேர வேண் டும்’’ என்று சிபிஐ பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்துகொண்டார்.