அன்டார்டிகா கண்டம் பூமியின் தென்முனையில் உள்ளது. சூரிய வெளிச்சம் மிகக் குறைந்த அளவே இங்கு வருவதால் வெப்பம் படாத இந்தக் கண்டம் ஏறக்குறைய 98% பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. இங்கே மக்கள் யாரும் நிரந்தரமாய் குடியிருக்கவில்லை. வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்வுக்கூடங்கள் மட்டுமே செயல் படுகின்றன. இந்தியாவின் தட்சின் கங்கோத்ரி, மற்றும் மைத்ரி எனும் இரு ஆய்வகங்கள் உள்ளன.
காண்டாமிருகத்தின் முகத்தில் உள்ள கொம்பு வடிவத்தில் உள்ள பகுதியில் பல்வேறு லார்சன் வளைவுப் பகுதிகள் உள்ளன. அத்தகைய வளைவுகளில் ஒன்றான லார்சன்-சி (C) , அண்டார்டிகாவின் நான்காவது பெரிய பனி அடுக்கு ஆகும்.
இந்தப் பனியடுக்கில், கடந்த 2014 ல் ஒரு விரிசல் விழுந்தது. அந்த விரிசல் மிக வேகமாக முன்னேறி விஞ்ஞானிகள் அது ஒரு முழு இடைவெளி நெருக்கமாக உள்ளது என்று சம்பந்தப்பட்டிருந்தது. இந்தப் பிளவுக்கு அதிகரித்து வரும் வெப்பநிலை தான் காரணமாக, டிசம்பர் முதல், தினமும் சுமார் ஐந்து கால்பந்து மைதானம் அளவிற்கு விரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
லார்சன் சிஉள்ள இந்த விரிசல் தற்போது சுமார் 100 மைல் நீளத்திற்கு நீண்டுள்ளதுடன் அதன் அகலம் இரண்டு மைல் தூரத்திற்கு பரந்து விரிந்துள்ளது. இந்த விரிசல் பனி அடுக்கின் எதிமுனையை அடைய இன்னும் 20 மைல் தொலைவே மீதமுள்ளது. எனவே இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்தப் பனியடுக்கு உடைந்துவிடும் என இந்தப்பிளவை 2014 முதல் கண்காணித்து வரும் பிராஜக்ட் மிடாஸ் அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து, ஆராய்ந்து வரும், வேல்ஸ்-ல் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகப் பேராசிரியர் அட்ரியன் ஜே லூக்மென் அவர்கள், “ இதற்கு முன்னர், லார்சன் A மற்றும் B பனி தட்டுகள் 1995 மற்றும் 2002 ல் பிளவுற்றன. அவை இரண்டும், லார்சன் சி –யை விட அளவில் மிகவும் சிறியதாக இருந்தன. எனவே உலகப் கடல் மட்ட அளவில் எந்தப் பாதிப்பையும் அவையிரண்டின் பிளவு ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த லார்சன் சி உடைவதால் கடல் சராசரி அளவு மாறுபடும்” என்றார்.
கலிபோர்னியா இர்வின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் நாசாவின் வின்வெளி ஏவுகணை ஆய்வுக்கூடத்தில் மூத்த விஞ்ஞானியுமாயுள்ள ஜே ரிக்னாட், “ இந்த லார்சன்-சி பிளவு படுவதால், அதன் பின் உள்ள பல்வேறு பனியடுக்குகளுக்கு ஆபத்து நேரலாம். ஒட்டுமொத்த அண்டார்டிகா கண்ட்த்தின் அமைப்பையே இது மாற்றிவிடும் தன்மை கொண்டது “ என்கின்றார்.
இந்தப் பனியடுக்குப் விரிசலால் உருவாகும் பிளவு, உலகின் மிகப்பெரிய பனிப்பாறையை உருவாக்கும்.
உலகின் ஒரு மூலையில், அளவிற்கதிகான பெட்ரோலிய எரிபொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உலகவெப்பநிலை மாற்றம், மனிதர்கள் காலடி வைக்காத அண்டார்டிகா பகுதிகளில் எதிரொலிப்பதை இது பறைசாற்றுகின்றது.