தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தற்போது சசிகலா அணியில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வாக்காளர்கள் குரலுக்கு செவி சாய்ப்பேன் என்றும் கட்சியன் ஒற்றுமையையும்ம், மறைந்த முதல்வர் ஜெயலலலிதாவின் புகழையும் கருத்தில்கொண்டும் முடிவெடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் ஓ.பி.எஸ். அணிக்கு தாவுகிறாரோ என்ற எண்ணத்தை பரவலாக ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அவர் தற்போது ஓ.பி.எஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவர் ஆவடி சட்டமன்றத்தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்ட்ட பாண்டிராஜன், தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். அவரது தொகுதி மக்கள் பலர், தொடர்ந்து, “பாண்டியராஜன் நல்ல முடிவை எடுக்கவேண்டும். சசிகலா பக்கம் இருக்கக்கூடாது” என்று சமூகவலைதளங்களில் எழுதி வந்தார்கள். பாண்டியராஜனின் ட்விட்டர் பக்கத்திலும் இதை பின்னூட்டங்களாக பதிவிட்டனர். அவருக்கு நேரடியாக வாட்ஸ்அப்பிலும் இதே கருத்தைத் தெரிவித்தார்கள். இதன் அடிப்படையில் மாஃபா பாண்டியராஜன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.