தற்போது தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து வரும் முதல்வர் ஓபிஎஸ் கூறியதாவது,
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்து நான், தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.
கிராம் கிராமமாக சென்று வீடு வீடாக சென்று மக்களை சந்திப்பேன் என்று கூறினார்.
பாரதியஜனதா என்னை இயக்குவதாக கூறப்படுவது வடிகட்டிய பொய் என்றார்.
ஆளுநர் வித்யாசாகர் சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே செயல்படுகிறார். சட்டமன்றத்தில் உறுதியாக எனது பலத்தை நிரூபிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்
Patrikai.com official YouTube Channel