அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி.
‘ஒரு இயக்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக நாங்கள் திகழ்கிறோம் என்கேறார் மேலும் அதிமுக எக்கு கோட்டை என்றார் கே.ஏ.செங்கோட்டையன்
மேலும் சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றது குறித்து கூறுகையில், அனைத்து உறுப்பினர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த அவகாசம் இல்லாததால் பொதுக்குழு சசிகலாவை பொதுச்செயலாளராக பரிந்துரைத்தது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளரை பரிந்துரைக்கலாம், பிறகு தேர்வுசெய்யப்பட்டவர் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெறலாம் என்றார்.
அதிமுகவிற்காக ஒரு துரும்பைகூட கிள்ளி போடாதவர் பி.எச். பாண்டியன். பதவிக்காக இல்லாமல் கட்சிக்காக உழைப்பவர்கள்தான் உண்மையான தொண்டர்கள்.
சசிகலா பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பது விரும்பியது பன்னீர்செல்வம்தான் என்றும் கூறினார்.
யார் முதலமைச்சராக வர வேண்டும் என்பது அதிமுக உரிமை. சசிகலா முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது. கட்சி பதவியும், ஆட்சியும் ஒருவரிடத்தில் இருப்பதுதான் வழக்கம்.
எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி எடுபடாது. சசிகலா நல்ல நேரத்திற்காக காத்திருக்கிறார் என்றார் செங்கோட்டையன்.